Categories
தேசிய செய்திகள்

அட! காசு ரொம்ப செலவாகுது…. எங்க ஊர்ல மதுக்கடை வையுங்க…. வீதிக்கு வந்த பெண்கள்…!!!

ஆந்திர மாநிலம் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள பெடமெடப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுடைய கிராமத்தில் சீக்கிரமாக மதுக்கடை வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அந்த பெண்கள் இந்த கோரிக்கையை அதிகாரிகளுக்கு வைத்திருக்கின்றனர். ஆனால் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால் தற்போது வீதிக்கு வந்து போராடியுள்ளனர்.

தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்து பேசிய அப்பெண்கள், “எங்கள் கிராமத்து ஆண்கள் குடிக்கக் கூடாது என நினைத்தோம். ஆனால் அவர்கள் குடிப்பதை நிறுத்தவில்லை. பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்கி குடிக்கிறார்கள். இதனால் எங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்கள் ஊரில் மதுக்கடை இருந்தால் குறைந்த விலைக்கே மதுவை வாங்கி விடுவார்கள். எனவே தான் நாங்கள் மதுக்கடை வேண்டுமென்று போராடுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |