Categories
லைப் ஸ்டைல்

அட காலையிலே டீயை நிறுத்துங்க…. இதை எடுத்துக்கோங்க…. ரொம்ப நல்லது…!!

பெரும்பாலும் நாம் எழுந்ததுமே காலையில் டீ அல்லது காபி தான் முதல் உணவாக எடுத்துக் கொள்கிறோம். சிலர் அதோடு சேர்த்து பிஸ்கட் அல்லது ரஸ்க் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பது நல்லதல்ல என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் காலையில் எழுந்ததும் என்ன குடிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர்:

தென் மற்றும் வெதுவெதுப்பான குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் உங்களுடைய ஜீரண சக்தி நன்றாக இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம்.

ஊற வைத்த பாதாம்:

ஊற வைத்த பாதாமை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குதற்கான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. தினமும் காலையில் 4 முதல் 5 பாதாம் சாப்பிட்டால் தினமும் தேவையான ஊட்டச்சத்து கிடைத்து விடும்.

நெல்லிக்காய் ஜூஸ்:

நெல்லிக்காயில் உள்ள ஆல்கலைன் ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்து உறுதி ஆக்குவதால் உங்களுடைய சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

பப்பாளி:

பப்பாளியானது கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவும். பப்பாளி சாப்பிட்டால் ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது.

சியா விதைகள்:

இதில் உடலுக்கு தேவையான ஏழு வகையான அமினோ ஆசிட்கள் உள்ளன. அதோடு பேட்டி ஆசிட் உள்ளதால் இதை ஒரு ஸ்பூன் இரவு ஊற வைத்து மறுநாள் காலை அப்படியே சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.

தர்பூசணி:

தர்பூசணி காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது தான் சிறந்த தருணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுறுசுறுப்பிற்கு தேவையான ஊட்டச்சத்து, நீர்ச்சத்து நிறைந்தது.

பேரீச்சை:

ஒரு நாளை துவங்க பேரீச்சை நல்ல உணவு பொருளாக இருக்கும். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகும். இதில் பொட்டாசியம் இருப்பதால் வயிற்று கோளாறுகளுக்கும் நல்லது.

நெய்:

நெய்யை அப்படியே சாப்பிடாமல் வேப்பம் பொடியை குழைத்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. இதன் பின்னர் ஒரு கிளாஸ் சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்

Categories

Tech |