3 பேருந்துகளில் 79 பேர் மரியபோலில் இருந்து தப்பித்து ஸபோரிஸியா என்ற நகருக்கு வந்தடைந்துள்ளனர்.
உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது மாதமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டின் போரின்போது மரியபோல் நகரம் தீவிரமான தாக்குதலுக்கு மட்டுமல்லாமல் மிகமோசமான மனிதாபிமான பேரழிவையும் சந்தித்திருக்கிறது.
இந்நிலையில் ரஷ்ய ராணுவ படைகளால் கைப்பற்றப்பட்ட மரிய போல் நகரத்திலிருந்து பலவிதமான முயற்சிகளுக்குப் பிறகு 3 பேருந்துகளில் 79 பேர் நேற்று ஸபோரிஸியா நகரத்திற்கு தப்பி வந்துள்ளனர். மேலும் இதில் சிலர் தங்களுடைய செல்லப் பிராணிகளையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தனர்.