உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக நடந்த சட்ட சபை தேர்தலின் முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் தலைமையில் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இந்நிலையில் முஸ்லீம் பெண்மணி ஒருவரை கொடூரமாக தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்ய வேண்டுமென்று மகளீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகளீர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா டிஜிபிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், உஜ்மா என்ற பெண் கட்சி மாறி வாக்களித்ததற்காக அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து மிரட்டலும் விடுத்துள்ளார். எனவே, அவர் மீது எப்.ஐஆர். பதிவுசெய்து விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். கட்சி மாறி வாக்களித்ததற்காக மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.