சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் பலியாகியுள்ளார்.
பின்லாந்து நாட்டில் ஜீவாஸ்கிலா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டும் பயணித்துள்ளார். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து திடீரென விழுந்து நொறுங்கியது.
இதனை அடுத்து விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த காரணம் உடனடியாக தெரிய வராத நிலையில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.