அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது 2 கைக்குழந்தை சகோதரர்களை கொன்ற சிறுவனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் நிக்கலாஸ் என்ற 13 வயதாகும் சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு 11 மாதம் மற்றும் 2 வயதுடைய தனது 2 சகோதரர்களை மூச்சு திணறடித்து மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து நிக்கலாஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 2 சகோதரர்களை கொன்ற குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது நிக்கலாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, அவர் சிகிச்சை எடுக்கப்படாத உளவியல் பிரச்சனைகளில் சிக்கியதாலயே தனது 2 சகோதரர்களையும் கொன்றுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே நிக்கலாஸ் கடவுளிடம் நேரடியாக ஒப்புதல் பெற்ற பிறகு தனது 2 சகோதரர்களையும் கொன்றதாக அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் நிக்கலாஸிற்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.