Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அட சூப்பரா இருக்காரே….. “ருசித்து சாப்பிடும் ‘க்யூட்’ குட்டி கோலி”….. வைரலாகும் இன்ஸ்டா போட்டோ..!!

சமீபத்தில் டி20 கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, தனது குழந்தைப் பருவத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர, அது வைரலாகி வருகிறது.

முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஆசிய கோப்பையில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் இந்தியாவின் அதிக ரன் அடித்த வீரராக இருப்பது மட்டுமில்லாமல் ஆசியக்கோப்பையிலும் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தனது 71வது சர்வதேச சதத்தை எட்டிய பிறகு, கோலி தனது திருமண மோதிரத்தை முத்தமிட்டு, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு மற்றும் மகள் வாமிகாவிற்கும் நன்றி தெரிவித்தார்.

இது கோலியின் முதல் டி20 சதமாகும், மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வந்திருப்பதால் இந்திய அணி நிம்மதி அடைந்துள்ளது. ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டர் கோலி பார்முக்கு திரும்பினார், பின்னர் ஹாங்காங்கிற்கு எதிராகவும் நல்ல ரன்கள் எடுத்தார். இலங்கைக்கு எதிராக 0 ரன்னில் ஆட்டமிழந்தற்கு பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கோலி  200 ஸ்ட்ரைக் ரேட்டில் சதம் அடித்தார். அதிரடி சதம் அடித்து பார்முக்கு வந்த விராட் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.. இதனால் வாழ்த்து மழையில் கோலி நனைந்து வருகிறார்..

இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் இருந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.. அதில் அவர் சுவையான உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.. மேலும் “காவோ பியோ ஐஷ் கரோ மித்ரோ, தில் பர் கிசி தா துகாயோ நா” என்று கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார். ‘உண்ணுங்கள், குடித்து மகிழுங்கள் நண்பர்களே, ஆனால் ஒருவருடைய இதயத்தை உடைக்காதீர்கள்’ என்று தலைப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |