நடிகர் விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்குகிறார். நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியிருந்தது. அதன்படி இந்த படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷால் அடுத்ததாக நடிக்கும் படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஷால், சுனைனா இருவரும் சமர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.