லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன்ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நடிகை நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள லூசிபர் படத்தில் பிரித்விராஜ் நடித்த கெஸ்ட் ரோலில் தெலுங்கில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் சல்மான் கான் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .