‘லொல்- எங்க சிரி பாப்போம்’ நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற புகழ், அபிஷேக் இருவருக்கும் தலா 25 லட்சம் பரிசு பணம் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல காமெடி நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய ‘லொல்- எங்க சிரி பாப்போம்’ என்ற நிகழ்ச்சி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த நிகழ்ச்சியை விவேக்குடன் இணைந்து மிர்ச்சி சிவாவும் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டார், ஆர்த்தி, சதீஷ், பிரேம்ஜி அமரன், குக் வித் கோமாளி புகழ், அபிஷேக், மாயகிருஷ்ணன் உள்பட 10 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த போட்டியாளர்கள் 6 மணி நேரம் மற்றவர்களை சிரிக்க வைத்து தாங்கள் சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் விதி.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் புகழ், அபிஷேக் இருவரும் டைட்டிலை வென்றுள்ளனர். மேலும் இருவருக்கும் தலா 25 லட்சம் பரிசு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் சம்பாதித்த புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்போது புகழ் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்பட ஏராளமான திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.