நயன்தாரா எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகின்றார். இவர் தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.
நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கு 10 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில் தற்போது திடீரென 15 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இவர் புதியதாக கமிட்டாகும் திரைப்படங்களுக்கு 15 கோடி சம்பளமாக பேசி வருகிறாராம். நயன்தாராவுக்கு வயதாவதால் சீக்கிரம் செட்டில் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு சம்பளத்தை உயர்த்தினார் எனவும் ஆனால் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளார்கள்.