ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை சுதந்திர தேவி சிலை. இந்த சிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. அமெரிக்காவிற்கும் பிரான்சுக்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்துரைக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டினரால் அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பிரான்சில் இருந்து கப்பல் மூலமாக அமெரிக்காவிற்கு வந்தடைந்தது. சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஒரு புத்தகம். அது அமெரிக்கா விடுதலைப்போரின் சரித்திரத்தை குறிக்கின்றது தலையில் ஏழு முனைகள் கொண்ட கிரீடம் உள்ளது. இந்த ஏழு முனைகள் ஏழு கண்டங்களையும் ஏழு கடல்களையும் குறிக்கின்றன.
பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். அந்த சிலையின் உயரம் மட்டுமே 34 மீட்டர். சுதந்திர தேவி சிலைக்கு ஒரு வருடத்தில் ஏறத்தாள 600 முறையாவது மின்னல் தாக்குதல் ஏற்படுகின்றது. சுதந்திர தேவியின் கால் பகுதியில் இருந்து தலைப்பகுதி வரை செல்ல 380 படிகள் செல்ல வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல் சுதந்திர தேவியின் தலையில் 75 ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து பார்த்தால் நியூயார்க் சிட்டி முழுவதுமே தெரியும்.