துணை முதல் மந்திரி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஆயோக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு வளர்ச்சி கொள்கையை பரிந்துரை செய்கிறது. மேலும் மாநிலங்களில் செயல்பாடுகள் பற்றி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் துணை-முதல் மந்திரி தேவேந்திர பட்னாவீஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தேசியதாவது. இந்த அமைப்பின் அடுத்த பரிணாமமாக மராட்டியத்தில் இது போன்ற ஒரு அமைப்பு தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் எடுக்கப்படும் முடிவுகளை ஆய்வு செய்ய முடியும்.
இதற்கு மாற்றத்திற்கான மராட்டிய நிறுவனம் மித்ரா என்று பெயரிடப்படுகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கூட்டுறவு கூட்டாட்சி வளர்க்கும் பயணத்தில் இது மற்றொரு மைல்கல்லாக இருக்கும். மேலும் இதுபோன்ற விவரங்களில் நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும். அதன் முடிவுகளை வைத்து மாநிலத்திலும் தரவுகளை விரிவாக ஆய்வு செய்து நிதி ஆய்வு அமைப்பு தொடங்கப்படும். உதாரணமாக ஒரு துறையிடம் நோய் பரவல் பற்றி விவரங்கள் உள்ளது. மற்றொரு துறையிடம் அசுத்தமான நீரின் இருப்பிடம் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. இந்த இரண்டு துறைகளும் தங்களது தரவை பகிர்ந்து கொண்டால் முடிவெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.