ரயில்வே நிலையத்தில் முககவசம் வழங்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் பயணிகள் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் இருந்து தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர்.இதனால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் முக கவசம் வரும் நவீன இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது. இந்த நவீன இயந்திரத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் 30 வினாடிக்குள் தூளாகிவிடும். அந்த தூள் பனியன் தயாரிக்க அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டு முக கவசம் பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.