Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அட நம்ப குக்கு வித் கோமாளி கனியா இது”… வேற லெவல்ல இருக்கும் பிக்…!!!

குக்கு வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்நிகழ்ச்சியானது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. குக்கு வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனியை அனைவருக்கும் தெரியும். இந்த ஷோவில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் சிறப்பாக செய்திருப்பார் கனி. இவர் தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த கனி தற்போது அவரின் யூடியூப் சேனலில் பொன்னியின் செல்வன் என்ற கதையை எளிமையாக சொல்லி வருகின்றார்.

இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மகளிர் தினத்தன்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் போஸ்ட் போட்ட சில மணி நேரங்களிலேயே வைரலானது. அந்த புகைப்படத்தில் கனி எப்போதும் போல் இல்லாமல் வித்தியாசமான தோற்றத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட்டுக்கு தற்போது லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

Categories

Tech |