Categories
மாநில செய்திகள்

அட நம்ம ஊர்ல இவ்வளவு இருக்கா…? நாட்டிலேயே தமிழ்நாடு தான் டாப்…. வெளியான ரிப்போர்ட்…!!

இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15 சதவீதம் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு வழியாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களில் மூன்று துறைமுகங்கள் சென்னையில் உள்ளன. 38,837 ஆலைகளுடன் நாட்டில் 15.7% பங்கை தமிழ்நாடு பெற்றுள்ளது. இரண்டாம் இடம் பிடித்த குஜராத்தில் 28,479 ஆலைகள் அதாவது 10,000 குறைவாக உள்ளன. மகாராஷ்ட்ரா, ஆந்திரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

Categories

Tech |