Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அட நம்ம டார்லிங் நடிகைக்கு பிரபல நடிகருடன் காதலா…?” கூடிய சீக்கிரம் திருமணம்… வெளியான செய்தி…!!!

நிக்கி கல்ராணிக்கு பிரபல நடிகருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்கப் போவதாக கூறப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் 2015-ம் வருடம் டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் ஆதியும் “யாகவராயினும்”, “மரகத நாணயம்” உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தபோது காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இவருக்கும் நடிகர் ஆதிக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆதியின் குடும்ப விழாவில் நிக்கி கலந்து கொண்டிருப்பதால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இவர்கள் இது குறித்து எந்த செய்திக்கும் பதிலளிக்கவில்லை. அதனால் இவர்கள் கூறினால் மட்டுமே இது உண்மையா? அல்லது வதந்தியா? என்பது தெரியவரும்.

Categories

Tech |