தமிழ் சினிமா துறையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக உருவெடுத்தவர்களில் ஒருவராக நிவேதா தாமசும் திகழ்கின்றார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் படங்களில் நடித்து பிரபலம் ஆகி உள்ளார். சென்னையில் பிறந்திருந்தாலும் தமிழை விட தெலுங்கு படங்களில் இவர் அதிகமாக நடித்திருக்கின்றார். சமீபத்தில் தெலுங்கில் அவரது நடிப்பில் சாகினி தாகினி எனும் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்களால் க்யூட்டான நடிகையாக கொண்டாடப்படும் நிவேதா தற்போது ஆளே மாறி போயிருக்கின்றார். முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு உடல் எடை கூடியுள்ளார். மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். பார்த்து அட நம்ம நிவேதா தாமசா இது? என பெருமூச்சு விடுகின்றார்கள் ஒருவேளை ஏதாவது புதிய படத்திற்காக உடல் எடை கூடி இருக்கிறாரா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். மேலும் நிவேத தாமஸ் எதற்காக இப்படி குண்டாக மாறிப் போய் இருக்கா என்பது பற்றி பெரிய விவாதமே நடந்து வருகின்றது.