நடிகை விசித்ரா மகனின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான முத்து படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் விசித்திரா. இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை விசித்ரா சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.
இதன்பின் பட வாய்ப்பு குறைந்ததால் நடிகை விசித்ரா திருமணம் செய்துகொண்டு பூனேவில் செட்டிலாகிவிட்டார். இருப்பினும் அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் தனது மகனுக்காக ஹெல்மெட் வாங்கும்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.
https://www.instagram.com/reel/CiDHVXSBDZF/?utm_source=ig_embed&ig_rid=a2c70fe2-f3f5-4071-afcd-6eaf8b4196a6