Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அட நான் இம்புட்டு அழகா” கண்ணாடியில் அழகை ரசித்த…. சேட்டைக்கார குரங்கின் வீடியோ….!!!!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள புளியமரம் ஒன்றில் பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் தங்கி உள்ளன. அந்த பகுதி மக்கள் அவ்வழியாக வரும்போது அவர்கள் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்கி தின்று அங்கேயே மரங்களில் தங்கி வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சேட்டை நிறைந்த குரங்கு ஒன்று தன்னுடைய குரங்கு சேட்டையை காட்டியுள்ளது. மருத்துவமனைக்கு ஒருவர் கொண்டு வந்த பால் பாட்டிலை பிடுங்கிய குரங்கு மூடியை திறந்து குடிக்க ஆரம்பித்தது.

பின்னர் குரங்கின் வாய்ப்பகுதி மற்று முகங்களில் ஒழுக ஒழுக குடித்துக்கொண்டிருந்த. இதனையடுத்து பாலை முழுவதுமாக குடித்த அந்த குரங்கு பக்கத்தில் இருந்த சிறிய கண்ணாடியை எடுத்து தன் முகத்தின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. தன் அழகை பார்த்த அந்த குரங்கு வெட்கப்பட்டு மீண்டும் மரத்தின் மேலே ஏறிக் கொண்டது. குரங்கின் இந்த செயல்பாடுகள் அந்த பகுதியில் உள்ள பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Categories

Tech |