விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ கலைஞர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் திரையுலகில் சாதிக்க இந்நிகழ்ச்சி பெரிய உதவியாக இருந்தது. அவ்வாறு இந்நிகழ்ச்சி வாயிலாக வளர்ந்து தற்போது சாதனை செய்து வருபவர்கள்தான் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர்.
தமிழை வளர்ப்போம், கிராமிய பாடல்களை மக்களிடம் அதிகம் கொண்டுபோய் சேர்ப்போம் என நிகழ்ச்சியில் நுழைந்து தற்போது இந்த தம்பதியினர் வளர்ச்சி கண்டுள்ளனர். இவர்கள் சமீபத்தில் மாஸான ஒரு வீட்டை கட்டி இருந்தார்கள். இப்போது இவர்கள் இருவரும் சுவிட்சர்லாந்து சென்று இருக்கின்றனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் எடுத்த புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.