Categories
உலக செய்திகள்

அட பாவிகளா…! ”14 வயது சிறுமிக்கு 62 வயது எம்.பி”…. பாகிஸ்தானில் நடந்த கொடுமை …!!

பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரான மவுலானா ஆசாத் சலாவுதீன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் முத்தஹிதா மஜ்லிஸ்- e -அமல் அரசியல் கட்சியை சேர்ந்தவருமான மௌலானா சலாஹுதீன், அயூபி என்ற 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின . 14 வயது சிறுமி ஜூஹூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவி ஆவார். அந்த சிறுமியின் பிறந்த தேதி அக்டோபர் 28, 2006 என்று பதிவாகியுள்ளதாக டான் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த சிறுமி பாகிஸ்தானில் சட்டப்படி திருமண வயதை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

62 வயதான மவுலானா அச்சிறுமி திருமணம் செய்து கொண்டதாக பாகிஸ்தான் அப்செர்வேர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்தத் திருமணம் முறையாக நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து சித்தரால் பகுதியில் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் போலீசில் புகார் அளித்துள்ளது .இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதன் பெயரில் சிறுமியின் வீட்டிற்கு விசாரிக்க சென்ற போது சிறுமியின் தந்தை இந்த திருமணத்தை பற்றி கூற மறுத்துவிட்டார். மேலும் அவர் தன் மகளுக்கு 16 வயது வரை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று அவர் அதிகாரிகளுக்கு  உறுதியளித்துள்ளார்.  ஆனால் இந்த செய்தி குறித்து மௌலானா ஆசாத் தரப்பிலிருந்து எந்த விதமான தகவலும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர் .

Categories

Tech |