45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாதது குறித்து தற்போது விளக்கம் அளித்திருந்தார். அதில் எனக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்பு வந்தது. அதுமட்டுமின்றி கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம்? என்பது குறித்த தகவல்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென்று நேரடியாக லக்னோ வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து மர்மநபர்கள் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் வருவது போல எடிட் செய்து தகவலை பரப்பியுள்ளனர். அதில், கொழுந்தியாள் மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு கலந்து கொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்ததாக பழனிவேல் தியாகராஜன் கூறுவதுபோல போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பியுள்ளனர்.
இதனை கவனித்த பிடிஆர் வதந்தியான தகவலுக்கு கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இது வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை எப்படி இல்லாதவர் மகளுக்கு எப்படி விழா நடக்கும்? பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா? என்று பதிவிட்டுள்ளார்.
வடிகட்டிய முட்டாள்தனம்🤦♂️
கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில்🤦♂️
எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும்🤦♂️
பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா🤦♂️🤦♂️🤦♂️ https://t.co/0uoSq3Aalc
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 20, 2021