காய்கறி வியாபாரி ஒருவர் ரூ.22,000 மதிப்பிலான நாணயங்களை சேமித்து வைத்து இரு சக்கர வாகனம் வாங்கி உள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அசாம் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த காய்கறி வியாபாரியான ஹஃபிஸுர் அகந்த் என்பவர் ஒரு வருடத்திற்கும் மேலாக தான் சேமித்து வைத்த ரூ.22,000 மதிப்பிலான நாணயங்களை கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி உள்ளார். மேலும் இது குறித்து ஹஃபிஸுர் அகந்த், அதிகமான செலவு இருந்ததால் இப்படி சேமித்ததாக கூறுகிறார்.
இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு இந்த நாணயங்களை ஷோரூமில் கொடுத்துள்ளார். அப்போது அங்குள்ள ஊழியர்களும் அவர் கொடுத்த நாணயங்களை ஏற்றுக்கொண்டனர்.மேலும் அவர் கொடுத்த காசு நிறைந்த பையை எண்ணுவதற்கு 2 முதல் 3 மணி நேரங்கள் ஆனதாகவும் கூறியிருக்கிறார்கள்.