டெல்லியைச் சேர்ந்த இளைஞர் உபைத். இவர் ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, டெலிவரி ஆன உணவை பார்சலை பிரித்து பார்த்தபோது ஆனியன் ரிங்ஸ்க்கு பதிலாக, வெறும் வெட்டப்பட்ட வெங்காயம் மட்டுமே இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த இவர் டெலிவரி செய்த உணவகத்தைக் கண்டிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், டெலிவரியான வெங்காயத் துண்டுகளை விரல்களில் ரிங்காக மாட்டிக் கொண்டு போஸ்கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட உணவங்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்