Categories
லைப் ஸ்டைல்

அட வெறும் காலில் நடப்பதால்…. எவ்ளோ நன்மைகள் கிடைக்குனு பாருங்களேன்…!!

செருப்பு இல்லாமல் வெறும் தரையில் நடப்பதால் ஏரளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முன்பு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் செருப்பு இல்லாமல் வெறும் காலில் தான் தரையில் நடந்து உள்ளனர். அப்படி தரையில் நடப்பது மிகவும் நல்லதாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் செருப்பு இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. இப்போதெல்லாம் நம் மக்கள் வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து கொண்டு நடக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி நவீன காலத்தில் போய் நான் தரையில் செருப்பு அணியாமல் நடந்து செல்லுங்கள், மண் தரையில் படுத்து உறங்குங்கள் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இவை தான் நமது ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சங்கள் என்பதுடன், தரையுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது எண்ணற்ற நன்மைகளை தருகிறது என நவீன மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்யமான வாழ்வுக்கும் இன்றியமையாதது.

பாதத்துக்கு அடியில் ஊசிகள் குத்திச்செய்யும் அக்குபஞ்சர் என்னும் சீன சிகிச்சையின் மறு உருவமே செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடப்பது ஆகும்.

பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதி கால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இதயம், சிறுநீரகம், முதலிய எல்லா உறுப்புகளுடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை துரிதப்படுத்தும்.

Categories

Tech |