Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சாலையில் உலா வந்த காட்டு யானை…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாளை அதிரடித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் யானை ஒன்று தட்டபள்ளம் பகுதியில் இருக்கும் சாலையின் குறுக்கே நின்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டனர்.

அந்த யானை நீண்ட நேரமாக சாலையில் அங்கும் இங்கும் உலா வந்ததால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானை தேயிலை தோட்டத்திற்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டனர். இதனையடுத்து கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |