Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. மலைப்பாதையில் ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், மாணவ-மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்திற்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 10-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். அந்த உத்தரவின்படி பண்ணாரி சோதனை சாவடியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வாகனங்களும் காலை 6 மணிக்கு மேல் செல்வதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக புளிஞ்ஞர் சோதனை சாவடியில் இருந்து பண்ணாரி வரை செல்ல 40 நிமிடங்களே ஆகும்.

ஆனால் தற்போது போக்குவரத்து நெரிசலால் இந்த பகுதியை கடக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் பேருந்துகள் சிக்கிக் கொள்வதால் கடந்த 11-ஆம் தேதி முதல் மாணவ-மாணவிகள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வருகின்றனர். மேலும் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டு செல்லும் வியாபாரிகளும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Categories

Tech |