பிரபல நாடு அணுசக்தி தயாரிக்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளது.
ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பல கடந்து 2015-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. இதன் காரணமாக ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு இஸ்ரேல் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஈரான் நாட்டின் அணுசக்தி தலைவர் எங்களிடம் சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தயாரிக்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.