உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் அவ்வபோது அணுகுண்டு வீசி விடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா முதலான நாடுகள் துணை நிற்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவேளை அணுகுண்டு வீசப்படும் ஆனால் என்ன நடக்கும் என்பது குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்களை அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டு இருக்கின்றார்கள்.
அணு ஆயுதப்போர் வெடிக்கும் ஆனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். மேலும் உணவு இல்லாமல் பட்டனி கிடந்து முழு உலகமும் அழிந்து போகும் என எச்சரிக்கை விடுக்கின்றார்கள் அறிவியல் அறிஞர்கள். அமெரிக்க பல்கலைக்கழகமான Rutgers பல்கலை அறிவியல் அறிஞர்கள் அணு ஆயுதப் போரில் தாக்கம் பற்றி விளாவரியாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவுகள் அதிர வைக்கின்றது. அதாவது அனு ஆயுத போர் ஏற்பட்டால் போரால் உயிரிழக்கும் ஏராளமானவர்கள் போக அதற்குப் பிறகும் உலகம் முழுவதும் 5 மில்லியன் மக்கள் பட்டினியால் உயிரிழப்பார்கள் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
போருக்கு பின் இரண்டாவது வருடத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் கிட்டத்தட்ட அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என கூறி வயிற்றில் புளியை கரைக்கிறது இந்த ஆய்வு. ஆனால் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலோ மனிதர்கள் உயிரிழக்க மாட்டார்கள் எனவும் ஆனாலும் கால்நடைகள் அனைத்தும் உயிரிழந்த விடும் எனவும் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படாது எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.