ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து விமானங்களை தாக்கும் இயந்திரங்களின் வீடியோவை வெளியிட்டுள்ளது.
உலகின் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக ஒரு சில நாடுகள் ராணுவத்திற்கு என்று பெரும் தொகையை ஒதுக்கி வருகின்றார்கள். இதன் காரணமாக அந்த நாடுகள் ராணுவத்தில் திறமை வாய்ந்ததாக இருக்க முடியும். இந்நிலையில் ரஷ்யா தன்னுடைய இராணுவ பலத்தை தற்போது காட்டி வருகிறது. அந்த வகையில் அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து விமானங்களை சுட்டு தாக்கக்கூடிய டெர்மினேட்டர் டேங்கள் குறித்த விடியோவை ரஷ்யா தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வீடியோவில் வெளியிட்டுள்ள இந்த போர் இயந்திரம் 2017 ஆம் வருடம் சிரியாவில் நடத்தப்பட்ட போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது அதன் வீரியம் மிகுந்த சக்தியைக் காட்டும் வகையில் இந்த வீடியோ உள்ளது. இந்த இயந்திரமானது இலக்குகளை நோக்கி தொடர்ந்து ஏவுகணைகளை வீசிக்கொண்டிருக்கும். இது ஹெலிகாப்டர் மற்றும் குறைந்த அளவு பறக்கும் விமானங்களை தாக்கும் திறன் கொண்டவை ஆகும்.
இதில் 4 ஏவுகணைகள், 2 ஆட்டோ பீரங்கிகள், 2 வேகமாக சுடும் கைக்குண்டு ஏவுகணைகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை உள்ளடக்கியுள்ளது. உலகளாவிய அணுசக்தி யுத்தத்தின்போது நடக்கும் குண்டுவெடிப்புக்கு பிறகும், கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்புடன் போராடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 வது முறையாக ரஷ்ய அதிபராக உள்ள விளாடிமிர் புடினின் பதவியேற்பை குறிக்கும் வகையில் 2018ம் வருடத்தில் டெர்மினேட்டர்களின் சக்தியை இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவை காண:
blob:https://www.thesun.co.uk/623cf851-1539-452b-8380-7eb8281bf160