Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்… “அமெரிக்கா இக்கட்டான சூழலை உருவாக்குகிறது”… ஈரான் குற்றச்சாட்டு…!!!!!

அமெரிக்கா கடந்த 2018 -ஆம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து  வெளியேறியுள்ளது. இதனையடுத்து ஈரான் அரசு அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்து வந்தது. அதே நேரம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி பேசிய போது, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய இக்கட்டான நிலைக்கு அமெரிக்காவின் தவறான நடத்திய முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாசர் கனாணி, ஈரான் அரசு பேச்சுவார்த்தைகள் மூலமாக அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற விரும்புகிறது. ஆனால் அரசின் செயல்பாடுகளும் அதன் அறிக்கைகளும் முரண்பாடாக இருக்கிறது எனவும் இது ஒப்பந்தம் தொடர்பான அடிப்படைக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற தரப்பினர் இடையே பலதரப்பு தீர்வுகள் குறித்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது மட்டுமல்லாமல் பல்வேறு சிக்கலான சர்வதேச பிரச்சனைகளுக்கு அமெரிக்க அரசின் தவறான நடவடிக்கைகளை காரணம் என விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |