Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்…” இது சரியான நேரம் இல்லை”… பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஈரான்..!!

ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அணுசக்தி ஒப்பந்தத்தின்  எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இடைத்தரகு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளது .

2015 அணுசக்தி ஒப்பந்ததை  திரும்ப உறுதியளிக்க அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்துள்ளது . ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற பேச்சு வார்த்தையே இல்லாமல் பொருளாதார தடைகளை எப்படி நீக்குவது என்று கேள்வி எழுப்பியுள்ளது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஈரான் மறுத்ததாக சயீத் கடிப்சாதேஹ் என்ற வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

அதில் அவர் கூறுகையில் , அமெரிக்கா மற்றும் 3 ஐரோப்பிய நாடுகளின் சமீபத்திய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஐநா பாதுகாப்பு குழுவின் ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளரால் முன்மொழிய பட்ட இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் இது இல்லை என்றும், பைடன் நிர்வாகம் ட்ரம்பின் தோல்வியுற்ற  கொள்கைகளை கைவிடவில்லை என்றும்  கூறியுள்ளார்.

Categories

Tech |