Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்…. செறிவூட்டும் பணியை தொடங்கிய ஈரான்….!!

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20% வரை செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான்  300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான்  செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20% வரை செறிவூட்டும் பணியை போா்டோ சுரங்க அணு சக்தி மையத்தில் தொடங்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Categories

Tech |