Categories
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்… ரஷ்யாவிற்கு பிரபல நாட்டு அதிபர் எச்சரிக்கை…!!!!!

ரஷ்யா அதிபர் புதின் உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோபைடன்  புதினை எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கில் இருந்த ரஷ்ய படைகள் மின்னல் வேகத்தில் விரட்டி அடித்துள்ளது. இந்த பின்வாங்கும் நடவடிக்கை ரஷ்யாவிற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் இது பற்றி புதின் பேசும்போது, ரஷ்யா இன்னும் வலுவாக பதில் அளிக்கும் என புதின் எச்சரிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக ரஷ்யா ஒரு காலகட்டத்தில் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான வழிகளை பயன்படுத்தக் கூடும் என்ற கவலை உலக அரங்கில் எழும்பி இருக்கிறது.

இந்த சூழலில் அத்தகைய ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதை பற்றி புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் என்ன சொல்வார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். அதற்கு பைடன் பேசும்போது வேண்டாம் இது இரண்டாம் உலகப் போருக்கு பின் போரின் முகத்தை மாற்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதன் மூலமாக உக்ரைனில் தந்தி ரோபாய அணு அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்யா அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஜோபைடன் வலியுறுத்தி இருக்கிறார். இருப்பினும் உக்ரைனில் அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்ற மேற்கத்திய நாடுகளின் கருத்துக்களை ரஷ்ய அதிகாரிகள் நிராகரித்திருக்கின்றார்கள்.

Categories

Tech |