Categories
உலக செய்திகள்

அணு ஆயுதங்கள்: தொடரும் போர் பதற்றம்!…. ரெடியாகும் சுவிட்சர்லாந்து….!!!!!

உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை பல்வேறு நாடுகளும் உணரத் தொடங்கி வருகின்றன. இதனிடையில் சில நாடுகளில் எரிபொருள் விலையானது உயர்ந்துவிட்டது. மேலும் சில நாடுகளில் கோதுமை முதலான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கொஞ்சம் கூட மனசாட்சியே இன்றி பொதுமக்களையும் புடின் கொன்று குவித்து வரும் சூழலில், இந்த ஆள் அணுகுண்டு வீசினாலும் வீசிவிடுவார் என்ற ரீதியில் சில நாடுகள் யோசிக்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் சுவிட்சர்லாந்து அணுகுண்டு பாதிப்புக்குத் தப்பும் பதுங்கு குழிகளை தயார் செய்யத் தொடங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்து மக்கள் அனைவருமே அடைக்கலம் அடையும் அளவுக்கு இடவசதி கொண்ட அந்த பதுங்கு குழிகள் பனிப்போர் காலகட்டத்தின் போது கட்டப்பட்டவையாகும். உண்மையாகவே எப்படி சுவிட்சர்லாந்து சாக்லேட்டுக்கும் கைக்கடிகாரங்களுக்கும் புகழ் பெற்றதோ, அதேபோன்று பதுங்குழிகளுக்கும் பெயர் பெற்றதாகும். அதாவது கட்டிடங்களுக்குக் கீழே கட்டப்பட்டுள்ள அந்த பதுங்கு குழிகள், அண்மை காலமாக மதுபானங்கள் சேமித்து வைக்கப்படுவதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் உக்ரைன் போர் காரணமாக அவை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் தங்குவதற்காக தயார் செய்யப்பட இருக்கின்றன. உக்ரைன் அருகில் தான் இருக்கிறது என்பது போன்று சுவிஸ் மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள் என்று தெற்கு Wallis பகுதியில் பொது மற்றும் இராணுவ பாதுகாப்பு சேவைகளுக்கு தலைமை வகிக்கும் Noth-Ecoeur கூறினார்.

Categories

Tech |