Categories
உலக செய்திகள்

“அணு உலைகளை மூட போறோம்”…. புதிய ஆற்றல் மூலங்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறும் முயற்சியாக ஜெர்மனி மேலும்  3 அணு உலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனிடையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நிலக்கரி உற்பத்தி ஆரம்பித்து அணு உலைகளை மூடுவது வரை பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் எஞ்சியுள்ள 6 அணு உலைகளை 3 மூடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த 2011 ஆம் வருடம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலை வெடித்தது.

இதனையடுத்து அணு உலைகளை படிப்படியாக மூடும் முயற்சியில்ஜெர்மனி ஈடுபட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகவே வெள்ளிக்கிழமை முதல் ப்ரோக்டார்ஃப், கிராண்ட், கண்ட்ரெமிங்கென் உள்ளிட்ட  மூன்று அணு உலைகளும் மூடப்படுவதாக அறிவித்துள்ள ஜெர்மனி 2022ஆம் ஆண்டுக்குள் மூடப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள 6 அணு உலைகளும் அந்நாட்டின் மொத்த ஆற்றல் தேவையில் 12 சதவிகிதத்தை நிறைவு செய்கின்றனர். இதற்கு மத்தியில் 2030-ஆம் வருடத்துக்குள் ஜெர்மனி மரபுசாரா ஆற்றல் மூலங்களின் மூலமாக 80 சதவிகித ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

Categories

Tech |