அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் அணிதிரள வேண்டுமென பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அணைகள் பாதுகாப்பு சட்டமானது தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் சட்டம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா டிசம்பர் 2 ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று நடைமுறை கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உள்ள 5,264 அணைகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் அணை பாதுகாப்பு சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் என்ற குழுவை உருவாக்கி அதன் வாயிலாக அணைகளில் கண்காணிப்பு ஆய்வு செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மேட்டூர் அணை, வைகை கீழ்பவானி உள்ளிட்ட அணைகளும், சாத்தனூர் அணை தாமிரபரணி உள்ளிட்ட தடுப்பணைகள் ஒன்றிய அரசின் கீழ் சென்றுவிடும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அயல் நாட்டை ஒற்றையாட்சியின் கீழ் நிறுவுவதே பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதி திட்டமாகும்.
அதற்கான சூழ்ச்சி தான் அணைகள் பாதுகாப்பு சட்டம். மத்தியில் எந்த அரசாக இருந்தாலும் முல்லைப்பெரியாறு ,காவிரி அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதே கடந்த கால வரலாறு. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் சரி தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கும் போதும் சரி அவர்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கான கட்சிகளின் ஒரே நோக்கமாகும். அந்த நோக்கம் எழுதுவதற்கு இந்த அணைகள் பாதுகாப்பு சட்டம் வழிவகுக்கும். அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைத்து விடும் என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வேலை. மேலும் இச்சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவது அணைகளை தனியார் வசம் விடப்படும்.
இதன் மூலம் தன் வசப்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள் ஆறுகளிலும், ஓடைகளிலும் தரையில் காண்கிரிட் தளங்களை அமைத்து நீரை சேமிக்கும். இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படும் இதனை நம்பி உள்ள விளைநிலங்கள் பாலைவனமாகும். விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நெடுஞ்சாலைகளை ஒன்றிய அரசு தனியாரிடம் ஒப்படைத்து அதன் வாயிலாக சுங்கச்சாவடிகளில் கொள்ளை லாபம் ஈட்டுகிறது.
நெடுஞ்சாலைக்கு வந்துள்ள அதே நிலைதான் தற்போது அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக நாம் சந்திக்க வேண்டும். எனவே அணைகள் பாதுகாப்பு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. காவிரியும் முல்லைப் பெரியாறும் எங்கள் உரிமை அணை பாதுகாப்பு சட்டத்தை திரும்பப்பெற தமிழ் இன ஒதுக்கல் கைவிடு என்ற முழக்கத்துடன் கட்சி பேதமின்றி தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் எனவும் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.