கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் அணையின் வடிகட்டியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அணை அருகில் உள்ள சிறு கால்வாய் தொட்டியில் தண்ணீர் தேங்கி வருகின்றன. குறுகிய ஆழமுடைய சிமெண்ட் வடிகால் தொட்டியில் சிறுவர்கள் டைவ் அடித்து விளையாடுவதால் அவர்களது அடிப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர்களை அணை பகுதிக்குள் அனுமதிக்காமல் தடுக்க அங்கு காவலர்களை அமர்த்த வேண்டுமெனவும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.