Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு….. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தென் பண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரை இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது.

இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாழிக்கு 14,498 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடி 9,140 அடியாக குறைந்தது. இந்த தண்ணீர் அணையின் 8 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து செல்கிறது. அதன் பிறகு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டாலும் தென்பண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடித்து வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.

Categories

Tech |