தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக நீர்த்தேக்கங்களை அமைப்பதற்கான ஆய்வு பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களில் புதிதாக நீர்த்தேக்கங்களை அமைப்பதற்கான ஆய்வு பணிகளை நீர்வளத்துறை தொடங்கியுள்ளது.