கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து விரைவில் அணை கட்டப்படும் என்றும், குடிநீருக்காக தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்குத் தான் பயன் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேகதாது அணையை கட்ட கர்நாடகா அரசு ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.