Categories
தேசிய செய்திகள்

அணை திறப்பு… மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

ஆந்திர மாநிலத்தில் அம்மபள்ளி அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து நிவர் புயலால் ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அம்மபள்ளி அணையிலிருந்துநீர் திறப்பால் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மக்கள் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |