Categories
அரசியல் மாநில செய்திகள்

“அணை பிரச்சனை இனி இல்லை”….. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு…. துரைமுருகன் பதில்….!!!

அணை பிரச்சனைகள் இனி இருக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர் கட்சியின் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்வதாகவும், அங்குள்ள பேபி அணை பழுதுபார்க்க இங்கிருந்து செல்லும் போது கேரளா அரசு தடை விதிப்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். கேரள அரசுடன் தற்போது நல்ல நட்பு முதல்வருக்கு இருப்பதால், அந்த நட்பை பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் “அனைத்து அணைகளையும் பாதுகாப்பது மத்திய அரசு கொண்டுவரவுள்ள அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. மேலும் இச்சட்டம் வர இன்னும் ஒரு ஆண்டு ஆகும். இந்த சட்டத்தின்படி அணை பராமரிப்பு நம்மிடம் கொடுத்துள்ளதாகவும், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த சட்டம் வரும் வரை நமது தலைமைச் செயலாளர் உட்பட பலர் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழு அணையை கட்டுபடுத்தும். எனவே அணை பிரச்சனை இனி இல்லை” என்று தெரிவித்தார்.

Categories

Tech |