சேலம் மாவட்டத்தில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்றான சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூரில் அமைந்துள்ள அணை பூங்கா மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பூங்காவிற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனை தொடர்ந்து பூங்காவிற்கு வந்த பணியாளர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.