அண்டபுளுகு, ஆகாசபுளுகு புளுகுகிறார் ஸ்டாலின் என ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 505 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார்கள்.இன்றைக்கு எல்லா வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விட்டாச்சு, ஸ்டாலின் சொன்னார்…
அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் எல்லாகூட்டத்திலும் சென்று பொய் பொய்யாக பேசி வருகிறார் . அண்டப் புளுகு ஆகாசப் புளுகு அதுசொல்கின்ற தகுதியும் திறமையும் திமுகவிற்கே இருக்கிறது, வேறு எவருக்கும் இல்லை.
முதலமைச்சராக நான் வந்தவுடன் நான் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான கையெழுத்தாகத் தான் இருக்கும் என்று கூறினார். முடிந்ததா ? முடியாது…. தெரிந்திருந்தும் பொய்யை திரும்பத் திரும்ப திரும்ப சொல்லி, மக்களை நம்ப வைப்பதில் பெரிய கில்லாடிகள் திமுககாரன்,
வேலூர் மாவட்டத்தில் ஒருத்தர் இருக்கார் யாரு ? துரைமுருகன். அவர் பொய் சொல்வதில் வல்லவர். சொன்னீர்களே செய்தீர்களா என்று நீங்கள் வீடு வீடாக வாக்குகள் சேகரிக்கும் போது கேட்க வேண்டும் . தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் மாசம் மாசம் தருவேன் என்று சொன்னிங்களே.. கொடுத்தீங்களா… தரவில்லை என வீடு வீடாக சொல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டு கொண்டார்.