Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அண்டாவில் மறைத்து வைத்தநகை… பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரனை…!!

அண்டாவிற்குள்  வைத்திருந்த 7 1/2 ரூபாய் மதிப்பிலான நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்ணூர் கிராமத்தில் முத்துவேல்- காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்  வீட்டில் உள்ள 23 பவுன் தங்க நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாயை டிபன் பாக்ஸில் வைத்து தனது குழந்தையின் பள்ளி பேக்கில்  வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பேக்கை யாருக்கும் தெரியாமல்  அண்டாக்குள் மறைத்து வைத்தனர். இந்நிலையில்  நேற்று அண்டாவை  திறந்து பார்த்த காமாட்சி  நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காமாட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 1/2 லட்ச ரூபாய்  மதிப்பிலான தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |