அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நட்புறவையே தொடர விரும்புவதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பிரச்சினை நிலவும் சூழலில் சீனாவை ஒட்டியுள்ள சிக்கிம் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டர். அப்போது சீனா துருப்புகளால் ஊடுருவக்கூடிய முயற்சியை தடுக்கும் வகையில் இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை அவர் பார்வையிட்டார். இந்த நிலையில் டார்ஜிலிங்கில் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திரு. ராஜ்நாத் சிங் இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவை தொடரவே விரும்புகிறது. அதற்கான முயற்சிகளில் மேற்கொண்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
கள்வானில் 20 இராணுவ வீரர்கள் தாய் நாட்டிற்காக தங்களையே தியாகம் செய்துள்ளார்கள் அவர்களின் தியாகம் வீண்போகாது என தெரிவித்தார். தேசமும் அதன் எல்லைகளும் ராணுவ வீரர்களால் பாதுகாக்கப்படுகின்றன என திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். நாதுல என எல்லை அருகே உள்ள பிற பகுதிகளிலும் திரு. ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சமயத்தில் திரு. ராஜ்நாத் சிங் எல்லையில் ஆய்வு மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.