சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “அண்ணன் ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்திருந்தோம்; 2017இல் மீண்டும் இணைந்தோம்; ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்த விதத்தில் நியாயம்” என்று கேள்வி எழுப்பினார். மாபெரும் இயக்கமான அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைப்பவர் ஓபிஎஸ் என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிணைய வேண்டும் என அடிக்கடி அவர் அழைப்பு கொடுப்பார் என சிரித்துக் கொண்ட கலாய்த்தார். மேலும், ஓபிஎஸ்சிடம் உழைப்பு கிடையாது; ஆனால் பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை என்று குற்றம் சாட்டினார்.