தங்கையின் பிறந்தநாளை மறந்த அண்ணன் தாமதமாக கொடுத்த லாட்டரி சீட்டால் கோடிஸ்வரியான தங்கை.
அமெரிக்காவில் வசித்து வந்த Elizabeth Coker-Nnam கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனை அந்த பெண்ணின் அண்ணன் வாழ்த்து கூற மறந்த நிலையில் அதனை சரி படுத்தும் விதமாக அவரது அண்ணன் Elizabethக்கு ஒரு லாட்டரி சீட்டை பரிசாக வழங்கியுள்ளார். இதனை Elizabethமறந்துவிட்ட நிலையில், பல வாரங்களுக்கு பின் ஒருநாள் அண்ணனும் தங்கையும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது எதார்த்தமாக லாட்டரி டிக்கெட் என்ன ஆனது என்று அவரது அண்ணன் கேட்டுள்ளார்.
இதனையடுத்து நான் அதை மறந்தே போனேன் என்று கூறிய Elizabeth அதை எடுத்து பரிசோதனை செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அண்ணன் பரிசாக வழங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக 500,000 டாலர்கள் விழுந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அண்ணனும் தங்கையும் தொலைபேசியிலேயே அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் எலிசபெத் அவரது அண்ணனிடம் உங்கள் பிறந்த நாளுக்கும் நான் மறக்க முடியாத பரிசு ஒன்று தருவேன் என்று கூறியுள்ளார்.